கார்த்திக்கின் சுல்தான் படப்பிடிப்புத்தள சர்ச்சை-  தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

Published By: Daya

27 Sep, 2019 | 12:11 PM
image

கார்த்திக் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் தயாராகிவரும் ‘சுல்தான்’ படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் பகுதியில் நடைபெற்றது. இதன்போது சில அமைப்பினர் படப்பிடிப்பு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் படப்பிடிப்பு சிறிது நேரம் தடைபட்டது.

இது குறித்து தயாரிப்பு நிறுவனம் விளக்கம் வெளியிட்டிருக்கிறது.

அதில் ‘சுல்தான்’ திரைப்படம் திப்பு சுல்தான் என்ற மன்னரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்படும் படமல்ல என்று விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே கார்த்தி நடிப்பில் தயாராகியிருக்கும் ‘கைதி’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது என்பதும், கார்த்தி, ஜோதிகா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் தயாராகியிருக்கும் பெயரிடாத படம் பொங்கல் திருநாளன்று வெளியாகும் என்றும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right