சாட் நாட்டில் நேற்று முன்தினம் தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 30 பேர் வரையில் உயிரிழந்துருக்கலாம் என  அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

அந்நாட்டின் லிபிய எல்லை பகுதியான கொவ்ரி  ஃபவ்டி நகரில் உள்ள சுரங்கங்களில் தங்கம் இருப்பதாக கடந்த 2012 ஆம் ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிலர் சட்டவிரோத தங்க அகழ்வுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நியலையில் நேற்றைய முன்னதினம் 30 க்கும் அதிகமானோர் சட்டவிரோதமாக தங்கம அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில் சுரங்கத்தின் மேற்பரப்பில் இருந்து மண் திடீரென சறிந்து விழுந்துள்ளது.

அத்தோடு குறித்த பகுதிக்கு விரைந்த மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதோடு, இதில் சிக்கி 30 பேர் வரையில் உயிரிழந்திருக்கலாம் என  அதிகாரிகள் அஞ்சுகின்றமை குறிப்பிடத்தக்கது.