தற்பொழுது நிலவும் மழை மற்றும் வெள்ள நிலைமையினால் நேய்கள் பரவக்கூடிய அனர்த்த நிலை நிலவுவதாக சுகாதார அமைச்சின் இடர் முகாமைத்துவ பிரிவின் பிரதான அதிகாரி வைத்தியர் ஹேமந்த ஹெரத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தேவையற்ற வகையில் நீரில் இறங்குவதை தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

பல மாவட்டங்களில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட அனர்த்த நிலை தற்பொழுது குறைவடையவில்லை என்றும், இது தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறுவர்கள் மற்றும் வயதானோர் வெள்ளத்தினால் பாதிப்பிற்குள்ளாகி நேய்வாய்ப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கும் நிலை அதிகரித்துள்ளது. 

இதனால் அனைவரும் சுகாதார பாதுகாப்பு தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்துமாறும் சுகாதார அமைச்சின் இடர் மகாமைத்துவ பிரிவின் பிரதான அதிகாரி மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.