வீர­கே­ச­ரியில் வெளி­யான செய்தி தொடர்பில் அப்­பத்­தி­ரி­கையின் யாழ்.பிராந்­திய அலு­வ­லக செய்­தி­யாளர் தி. சோபிதன் கொழும்பு பொலிஸ் தலை­மை­ய­கத்துக்கு விசா­ர­ணைக்­காக அழைக்கப்பட்டுள்ளார். 

கொழும்பு பொலிஸ் தலை­மை­ய­கத்­துக்கு எதிர்­வரும் 4 ஆம் திகதி விசா­ர­ணைக்கு சமு­க­ம­ளிக்­கு­மாறு பொலிஸ் தலை­மை­ய­கத்தில் இருந்து செய்­தி­யா­ள­ருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. 

கோத்­த­பாய ராஜ­பக்ஷ­வுடன் டக்ளஸ், வரதர் தரப்­புக்கள் இணைந்து தமிழ் மக்­களை மேலும் நசுக்க கங்­கணம் கட்­டி­யுள்­ளனர் என முல்லைத்­தீவு மாவட்ட காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் சங்கத் தலைவி மரிய சுரேஷ் ஈஸ்­வரி யாழ். ஊடக அமை­யத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் தெரி­வித்­தி­ருந்­தமை தொடர்­பாக செய்தி வெளியாகியமை குறித்த விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.