பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி ஜக்குயஸ் சிராக் தனது 86 ஆவது வயதில் நேற்று வியாழக்கிழமை காலமானார்.

அவர் 1995 ஆம் ஆண்டிலிருந்து 2007 ஆம் ஆண்டு வரை பிரான்ஸின் ஜனாதிபதியாக பதவி வகித்தவராவார்.

பிரான்ஸ் பாராளுமன்ற அமர்வில் அவரது மரணத்தையொட்டி ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பிரான்ஸின் நீண்ட காலம் ஜனாதிபதியாக சேவையாற்றிய இரண்டாவது நபராக ஜக்குயஸ் சிராக் விளங்குகிறார்.

பதவியை விட்டு விலகிய பின்னர் நரப்பு சம்பந்தமான பிரச்சினைகளால் அவதிப்பட்ட அவர் பொது இடங்களில் தோன்றுவதை தவிர்த்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.