மலை­யகக் கல்வி அபி­வி­ருத்தி மன்றம், வீர­கே­சரி இணைந்து நடத்தும் வதி­விட பயிற்சிப் பட்­டறை

Published By: Vishnu

27 Sep, 2019 | 10:04 AM
image

2020 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் நடை­பெ­ற­வுள்ள “இலங்கை நிர்­வாக சேவை” போட்டிப் பரீட்­சைக்குத் தோற்­ற­வுள்ள நுவ­ரெ­லியா மாவட்­டத்தைச் சேர்ந்த விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்­கான வதி­விட பயிற்சிப் பட்­டறை இன்று வெள்­ளிக்­கி­ழமை காலை 9 மணிக்கு அட்டன் “சீடா” கல்வி அபி­வி­ருத்தி வள நிலை­யத்தில் ஆரம்பமாகியுள்ளது.

தொடர்ந்து நாளை 28 ஆம் திக­தியும், நாளை மறு­தினம் 29ஆம் திக­தியும் நடை­பெ­ற­வுள்­ளன.

இதற்­கான அனு­ச­ர­ணையை மலை­யகக் கல்வி அபி­வி­ருத்தி மன்­றமும், “வீர­கே­சரி” நிறு­வ­னமும் இணைந்து வழங்­கி­யுள்­ளன. நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் இருந்து போட்டிப் பரீட்­சைக்குத் தோற்­ற­வுள்ள 75 பேருக்கு  மேற்­படி பயிற்சிப் பட்­ட­றையில் பங்­கு­பற்­று­மாறு அழைப்புக் கடி­தங்கள் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன. 

இதற்­கான ஏற்­பா­டு­களை பேரா­சி­ரியர் கலா­நிதி ஏ.எஸ். சந்­தி­ரபோஸ், பேரா­தனைப் பல்­கலைக் கழ­கத்தின் சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் கலா­நிதி ஏ. ரமேஷ், வீர­கே­சரி நிறு­வ­னத்தின் பிர­தம செயற்­பாட்­டு அதிகாரி எம். செந்­தில்­நாதன் ஆகியோர் மேற்­கொண்­டுள்­ளார்கள்.

பயிற்சிப் பட்­ட­றையில் வள­வா­ளர்­க­ளாக சட்­டத்­த­ரணி ஆர். குகன், இலங்கை நிர்­வாக சேவை உத்­தி­யோ­கத்­தர்­க­ளான எப். கெனிஜுட், எஸ். பார்த்­திபன், என். தனஞ்­செயன் ஆகியோர் கலந்து கொண்டு வழி­காட்­டு­வ­தற்­கான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

இன்­றைய அங்­கு­ரார்ப்­பண நிகழ்வில் மேற்­படி ஏற்­பாட்­டா­ளர்­க­ளோடு, மலை­யகக் கல்வி அபி­வி­ருத்தி மன்­றத்தின் போஷ­கர்­க­ளான ஆர். மகேஸ்­வரன், எம். இராம­ஜெயம், ஆர். சீதா­ராமன், ஜே.பி. ஜெய­பாலன், வீர­கே­சரி நிறு­வ­னத்தின் சார்பில் கனிஷ்ட முகாமையாளர் எம். வாசு­தேவன் உட்­பட மன்­றத்தின் செயற்­குழு உறுப்­பி­னர்­களும் கலந்து கொள்­வார்கள்.

பரீட்­சார்த்­திகள் கூடு­த­லான புள்­ளி­களைப் பெறும் பொருட்டு ஊக்­கு­விக்கும் வகையில் மொத்­த­மாக 12 பயிற்சிப் பட்­ட­றைகள் தலா 3 நாட்கள் வீதம் 4 தட­வைகள் நடத்­தப்­ப­ட­வுள்­ளன. முதற்­கட்­ட­மாக இன்று முதல் 3 நாட்­க­ளுக்கு நடத்­தப்­ப­ட­வுள்­ளன. தொடர்ந்து ஏனைய பயிற்சிப் பட்­ட­றை­களும் நடத்­தப்­பட்டு ஒவ்வோர் அமர்வின் இறுதி நாளில் முன்­னோடிப் பரீட்­சை­களும் இடம்­பெ­ற­வுள்­ளன.

மலை­யகக் கல்வி அபி­வி­ருத்தி மன்­றத்தின் தலைவர் எம். தேவ­ராசன் தலை­மையில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள பயிற்சிப் பட்­ட­றை­க­ளுக்கு ஒருங்­கி­ணைப்­பா­ளர்­க­ளாக அரச நிர்­வாக சேவை உத்­தி­யோ­கத்தர் டி. கஜேந்­தி­ர­குமார் கட­மை­யாற்­றுவார்.

நாடா­ளா­விய ரீதியில் தமிழ், சிங்­கள, முஸ்லிம் பரீட்­சார்த்­திகள் 720 பேர் தோற்­ற­வுள்­ளார்கள். மலை­ய­கத்தில் நுவ­ரெ­லியா மாவட்­டத்­தி­லி­ருந்து முதன்­மு­றை­யாக 75  பேர் தோற்­ற­வுள்­ள­மையும் குறிப்­பிடத்தக்­கது.

மலை­ய­கத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய சிலர் மாத்­தி­ரமே இலங்கை நிர்­வாக சேவை உத்­தி­யோ­கத்­தர்­க­ளாக கட­மை­யாற்றி வரு­கின்­றார்கள். எதிர்­வரும் 2020ஆம் ஆண்டு நடை­பெ­ற­வுள்ள போட்டிப் பரீட்­சையில் அதி கூடு­த­லான புள்­ளி­களைப் பெற்று பலர் சித்­தி­ய­டையும் பட்­சத்தில், நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்ள பிர­தேச சபை­க­ளிலும், பிர­தேச செய­ல­கங்­க­ளிலும், அமைச்­சுகள், சுங்கத் திணைக்­களம் போன்ற உயர் நிறு­வ­னங்­களில் செய­லா­ளர்­க­ளா­கவும், உயர்பதவி வகிக்கக் கூடிய வாய்ப்புகளையும் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

எனவே, இது ஒரு சமூகக் கடமை என்ற வகையில் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றமும், வீரகேசரி நிறுவனமும் இணைந்து அனுசரணை வழங்கியுள்ளமை மலையகத்தில் ஒரு வரலாற்று நிகழ்வாகவும் திருப்பு முனையாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கொம்பனித்தெரு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்...

2024-07-22 17:25:02
news-image

கொழும்பு அளுத்மாவத்தை அகில இலங்கை ஆனந்த...

2024-07-22 16:53:53
news-image

வடக்கின் தொழில் துறைகளை பிரபல்யபடுத்த யாழ்ப்பாணம்...

2024-07-22 16:48:51
news-image

பலாங்கொடை கனகநாயகம் தமிழ் மத்திய கல்லூரி...

2024-07-22 17:03:16
news-image

எனது படைப்புகளில் இலங்கை தமிழ், சிங்கள...

2024-07-22 14:51:47
news-image

கொழும்பு புறக்கோட்டை சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத...

2024-07-22 12:03:03
news-image

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின்...

2024-07-22 11:50:09
news-image

கொழும்பு ஜிந்துபிட்டி ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி...

2024-07-21 17:12:18
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின்...

2024-07-20 17:22:18
news-image

வெலிமடை மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள்,...

2024-07-21 15:48:07
news-image

றொசில்டா அன்டனின் 'ஓய்ந்த பின்பும் ஓயாத...

2024-07-20 19:31:09
news-image

ஸ்ரீ வராஹி உபாசகர் குருஜி ஆனந்தன் ...

2024-07-20 15:37:03