வவுனியாவில் புதையல் தோண்ட முற்பட்ட எட்டுபேர் கைது

Published By: Daya

27 Sep, 2019 | 09:53 AM
image

வவுனியாவில் நேற்று இரவு நெளுக்குளம் பொலிஸாரால் புதையல் தோண்ட முற்பட்ட எட்டுபேரைக் கைது செய்துள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா நெளுக்குளம் பொலிஸாருக்கு நேற்று இரவு 10மணியளவில் இராசேந்திரகுளம் பகுதியில் புதையல் தோண்டுவதாகக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நெளுக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி திஸாநாயக்க தலைமையில் சென்ற குழுவினர் இராசேந்திரகுளம்  மயானத்திற்கு அண்மித்த பகுதியில் புதையல் தோண்டத் தயாராக இருந்த எட்டு பேரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களை வவுனியா பொலிஸ் நிலையத்தில் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் புதையல் தோண்டுவதற்காகப் பயன்படுத்திய மண்வெட்டிகள், அலவாங்கு, பிக்கான், பூஜைபொருட்கள் என்பனவற்றை கைப்பற்றியுள்ளனர். 

 வவுனியா விநாயகபுரம், கண்டி, காலி பகுதிகளைச் சேர்ந்த 27,33,40,44மற்றும் 57 வயதுடைய நபர்களைக் கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் மேலும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு...

2025-02-10 15:52:07
news-image

நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

2025-02-10 15:42:53
news-image

மின்வெட்டு குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

2025-02-10 15:24:38
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி...

2025-02-10 14:30:09
news-image

ஹொரணையில் போலி கச்சேரி சுற்றிவளைப்பு ;...

2025-02-10 13:57:16
news-image

மீனவர்கள் விவகாரம் இலங்கை மீது இந்தியா...

2025-02-10 14:05:21
news-image

ஜனாதிபதி நிதியத்திலிருந்து முறைகேடாக வழங்கப்பட்ட நிதி...

2025-02-10 14:20:22
news-image

யாழில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த...

2025-02-10 13:16:40
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-10 12:51:11
news-image

வவுனியா - தோனிக்கல் பகுதியில் கேரள...

2025-02-10 13:16:05
news-image

கெப் வாகனத்தில் கஞ்சா போதைப்பொருளை கடத்திச்...

2025-02-10 12:45:06
news-image

ஹட்டனில் சிறுத்தை ஒன்றின் சடலம் மீட்பு

2025-02-10 13:10:27