ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சரும் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சியின் ஆதரவாளர்கள் பலர் சிறிகொத்தா பிரதேசத்தில் ஆரவார கொண்டாட்டமும் பட்டாசு வெடிகளை கொளுத்தி, பதாகைகளை ஏந்திய வண்ணம் தமது  மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கடந்த 2010 ஆம் ஆண்டு மற்றும் 2015 ஆம் ஆண்டு கூட்டுக்கட்சிகளின் ஒத்துழைப்புடன் பொது வேட்பாளரை ஐக்கிய தேசிய கட்சி களமிறக்கினர். 

இதில் 2010 ஆம் ஆண்டு முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் 2015 ஆம் ஆண்டு அப்போதைய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவையும் களமிறக்கினார். 

இந்நிலையில் இம்முறை தேர்தலில் ஐக்கிய  தேசிய கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளராக அமைச்சர் சஜிதை களமிறக்கிவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் முழுமையான ஒத்துழைப்பும் ஐக்கிய தேசிய முன்னணி பங்காளிக்கட்சிகளின் ஆதரவும் கிடைத்துள்ள நிலையில் அவருக்கான முழுமையான ஒத்துழைப்புடன் அவர் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குகின்றார்.

இதேவளை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் வெடிகொளுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.