பிரான்ஸிலுள்ள இரசாயன தொழிற்சாலையில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், குறித்த இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயினை கட்டுப்படுத்தும் நோக்கில் 130 தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுவருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த தொழிற்சாலை அமைந்துள்ள நகரின் பாடசாலைகள் உடனடியாக மூடப்பட்டதோடு , மக்களை வேறு இடங்கள் நோக்கி செல்லுமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்நிலையில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லையென அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்தோடு குறித்த பகுதி கறுப்பு புகை மண்டலமாக காட்சியளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.