வவுனியாவில் வெடி கொழுத்தி கொண்டாட்டம்

By Daya

26 Sep, 2019 | 05:02 PM
image

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்டமைக்கு வவுனியாவில் வெடி கொளுத்தி கொண்டாட்டம்.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட்டதையடுத்து அவர்களது ஆதரவாளர்கள் வவுனியா நகரில் வெடி கொளுத்தி கொண்டாடினர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் குழப்பம் நீடித்த நிலையில் இன்று மாலை அமைச்சர் சஜித் பிரேமதாச வேட்பாளர் என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.இதனையடுத்து அவரது ஆதரவாளர்கள் வவுனியா நகரின் மரக்கறி மொத்த விற்பனை நிலையம் முன்பாகவும், வவுனியா பழைய பஸ் நிலையம் முன்பாகவும் வெடி கொளுத்தி ஆராவாரத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right