இந்திய அணியின் துடுப்பாட்ட ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்குவதற்காக தான் கெஞ்சி மன்றாட வேண்டியிருந்தது என தெரிவித்துள்ளார்.

1994 இல் நியுசிலாந்திற்கு எதிரான போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்குவதற்காக நான் கெஞ்சி மன்றாடினேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

என்னால் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி பந்து வீச்சாளர்களை அடித்து நொருக்க முடியும் என நான் கருதினேன் அதனால் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக  களமிறங்குவதற்கு கெஞ்சி மன்றாட வேண்டியிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

1994 இல் நியுசிலாந்திற்கு எதிரான ஒரு நாள் போட்டியில் நான் முதன்முதலில் ஆரம்பதுடுப்பாட்ட வீரராக களமிறங்கிய காலத்தில் அணிகள் விக்கெட்களை காப்பாற்றும் நோக்கத்துடன் காணப்பட்டன என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

எனினும் நான் சற்று வழமைக்கு மாறான விதத்தில் துடுப்பெடுத்தாடினேன் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

நியுசிலாந்திற்கு எதிரான அந்த போட்டியில் நான் 49 பந்துகளில் 82 ஓட்டங்களை பெற்றேன்,இதன் காரணமாக எனக்கு இன்னுமொரு வாய்ப்பை வழங்குங்கள் என நான் கேட்க வேண்டிய தேவை எழவில்லை என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

அணி நிர்வாகம் நான் ஆரம்பதுடுப்பாட்டவீரராக களமிறங்க வேண்டும் என்பது குறித்து ஆர்வத்துடன் காணப்பட்டதுஎனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனது இந்த அனுபவத்தின் ஊடாக எதனையும் முயன்று பார்ப்பதற்கு அச்சப்படாதீர்கள் என்பதே எனது செய்தி  என தனது ரசிகர்களிற்கு சச்சின் டெண்டுல்கர்  தெரிவித்துள்ளார்.