ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க அக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ள நிலையில் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பானது இன்று மாலை இடம்பெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழு கூட்டத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

இன்று காலை அலரி மாளிகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகமான சிறிகொத்தாவில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறும் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை உத்தியோகபூர்வமாக முன்மொழிவார் என அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.