ஓமந்தை, யுத்தம் முடிந்து 10 வரு­டங்கள் ஆகியும் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு கிடைக்­காமல் இருப்­ப­தற்கு காரணம் என்ன என்­பதை தமிழ் மக்கள் சிந்­திக்­க­வேண்டும் என தமிழர் விடு­த­லைக்­கூட்­ட­ணியின் செய­லாளர் நாயகம் வீ. ஆனந்­த­சங்­கரி தெரி­வித்­துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்­டுள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

கடந்த கால நல்­லாட்சி என்று கூறப்­ப­டு­கின்ற ஆட்­சியில் இரண்டு தேசியக் கட்­சி­களும் இணைந்து தேசிய அர­சாங்கம் அமைத்து அவர்­களின் உடன்­பாட்­டுடன் ஜன­நா­யக மர­பு­களை மீறி இரா. சம்­பந்­த­னுக்கு எதிர்க்­கட்­சித்­த­லைவர் பத­வியும் வழங்­கப்­பட்­டது. ஆனால் நடந்­தது என்ன? இது­வரை தமிழ் மக்­க­ளுக்கு ஏதா­வது கிடைத்­ததா? பதி­லாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு அவர்கள் எதிர்­பார்த்­ததை விட அதி­க­ளவு சலு­கைகள் கிடைத்­தன.

ஒரு அர­சாங்­கத்­துடன் பேரம் பேசும் போது பேரம் பேசு­ப­வர்கள் ஜன­நா­யகப் பண்­பு­களை மதிக்­கக்­கூ­டி­ய­வர்­க­ளாக சலு­கை­க­ளுக்கு சோரம் போகா­த­வர்­க­ளாக இருந்­தி­ருக்க வேண்டும். அதற்­கான தகுதி ஓர­ள­வுக்­கா­வது இருந்­தி­ருக்க வேண்டும். அத­னால்தான் என்­னவோ தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் கோரிக்­கைகள் அனைத்தும் 2004 தொடக்கம் இன்று வரை மாறி­மாறி வந்த அர­சு­களால்  புறக்­க­ணிக்­கப்­பட்டு வந்­துள்­ளன.

2001 ஆம் ஆண்டு புலி­க­ளுக்கு தவ­றான தக­வல்­களை வழங்கி ஒரு சிலரின் பத­வி­மோ­கத்துக்­காக உரு­வாக்­கப்­பட்­டதே தற்­போது நடை­மு­றை­யி­லுள்­ள­ பு­திய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஆகும். அப்­போது நடந்த தேர்­தலில் விடு­த­லை­பு­லி­களின் முழு ஒத்­து­ழைப்­புடன் ஜன­நா­யக தேர்தல் விதி­மு­றை­களை மீறி 22 பேர் வெற்றி பெற்­றார்கள். எனவே அரசின் ஜன­நா­யக விரோதப் போக்­கு­களை இவர்­களால் தட்­டிக்­கேட்க முடி­யாது. விடு­தலைப் புலி­களின் காலத்தில் உரு­வாக்­கிய கார­ணத்தால் அவர்­களின் பெயரைச் சொல்லி இன்று வரை மக்­க­ளிடம் பொய்­யான வாக்­கு­று­தி­களைக் கூறி ஏமாற்றி வரு­கின்­றார்கள்.

ஜன­நா­யக விதி­மு­றை­களை மீறியே எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியும் கொடுக்­கப்­பட்­டது. அதனால் அர­சாங்­கத்தைத் தட்டிக் கேட்கும் உரி­மையும் தகு­தியும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குக் கிடை­யாது. அர­சுக்குப் பட்ட நன்­றிக்­க­ட­னாக ஒவ்­வொரு வருட வரவு செலவுத் திட்­டத்­துக்கும் ஆத­ரவு கொடுத்து வரு­கின்­றார்கள்.

எந்த ஒரு விட­யத்­திலும் பேரம்­பேசும் சக்தி அவர்­க­ளுக்குக் கிடை­யாது என்று 2004 தொடக்கம் 2019 வரை அவர்­களின் ஜன­நா­யக விரோதப் போக்கை கண்­கா­ணித்து வந்­த­ அ­ர­சாங்­கங்கள் கூட்­ட­மைப்பின் வாயை அடைத்­து­விடும். இவர்­களும் ஏன் வம்பு-, கிடைப்­பதை சுருட்டிக் கொண்­டு­போ­கலாம் என்று இருந்­து­வி­டு­வார்கள்.

ஆனால் தமிழர் விடு­தலைக் கூட்­டணி அவ்­வாறு உரு­வா­ன­தல்ல. தந்தை செல்வா, சட்­ட­மா­மேதை ஜீ.ஜீ பொன்­னம்­பலம் போன்ற தன்­னலம் கரு­தாத தலை­வர்­களால் தமிழ் மக்­களின் ஒற்­று­மைக்­காக உரு­வாக்­கப்­பட்­டது. அமரர் சௌ. தொண்­டமான் அவர்­க­ளையும் இணைத்து மலை­யகம் வாழ் தமிழ் மக்­க­ளையும் ஓர­ணியில் திரட்ட உரு­வாக்­கப்­பட்­டது. இன்று வரை ஜன­நா­ய­கத்­துக்­கா­கவே போராடி பல தலை­வர்­களை துப்­பாக்கிக் குண்­டு­க­ளுக்கும் தற்­கொலை குண்­டு­தா­ரி­க­ளுக்கும் இரை­யாகக் கொடுத்து வடக்கு–கிழக்கு வாழ் தமி­ழர்­களின் ஒரே­யொரு ஜன­நா­யகக் கட்­சி­யாக தலை நிமிர்ந்து கூட்­டணி நிற்­கின்­றது.

1983ஆம் ஆண்­டு­ அன்­றைய ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜெய­வர்த்­த­ன­ பாரா­ளு­மன்ற ஜன­நா­ய­க வி­தி­மு­றை­க­ளை­ மீ­றி ­மேலும் ஆறு ஆண்­டு­காலம் பாரா­ளு­மன்­றத்­தை­ நீ­டித்­த­போது இது மக்கள் தந்­த­ ஆ­ணையை மீறும் செயல் எனக் கூறி­ அந்த ஜன­நா­யக விரோ­த­ போக்கைக் கண்­டித்து 16 பாரா­ளு­மன்­ற ­உ­றுப்­பி­னர்­களும் பத­வியைத் துறந்து சர்­வ­தே­சத்­துக்கு பாரா­ளு­மன்ற ஜன­நா­ய­கத்தைக் கற்­பித்த ஒரே­கட்சி கூட்­ட­ணி­யாகும். அத­னால்தான் பல­சோ­த­னை­க­ளையும் தாண்டி இன்றுவரை தனித்­தன்­மை­யுடன் நிற்­கின்­றது.

எனவே வடக்கு–கிழக்கில் இருக்­கின்ற ஒரே­யொரு ஜன­நா­யகக் கட்­சி­யான தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணி­யுடன் இணைந்து ஒற்­று­மை­யாக செயற்­பட்டு எந்த அரசு வந்­தாலும் தட்­டிக்­கேட்கும் தகு­தியும் தகை­மையும் உள்ள ஒரே அமைப்­புடன் இணைந்து செயற்­பட அனை­வ­ரையும் அழைக்­கின்றோம். ஒன்­று­பட்ட இலங்­கைக்குள் கடந்த 15 வரு­டங்­க­ளாக இந்­திய முறை­யி­லான ஒரு அரசியல் தீர்வை தமிழ் மக்களுக்குப் பெற்றுத்தர போராடிக் கொண்டிருக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கரங்களைப் பலப்படுத்த அனைவரையும் அழைக்கின்றோம்.

அடுத்தடுத்து தேர்தல்கள் வர இருப்பதால் கட்சியை புனரமைத்து மேலும் புதிய நிர்வாகிகள் தெரிவு சம்பந்தமாக வடக்கு கிழக்கு மாவட்டங்களில் எமது செயற்குழு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. எனவே எமது கட்சியுடன் இணைந்து செயற்பட விரும்புபவர்கள் எம்முடன் தொடர்புகளை மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.