யுவதியொருவரின்  ‪“ ‎Floodfie‬ ” தற்போது இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையையடுத்து பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற அனர்த்தங்கள் ஏற்பட்ட நிலையில் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்ட அதேவேளை பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் யுவதியொருவர் வெள்ளத்தில் நின்றவாறு செல்பி எடுக்கும் காட்சியை மற்றுமொருவர் புகைப்படமொடுத்து அதனை முகப்புத்தகத்தில் தரவேற்றியுள்ளார்.

குறித்த செல்பிக்கு ‎“ Floodfie” என பெயரிடப்பட்டு தற்போது இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.