நாட்டில் கடந்த 11 மாத காலப் பகு­தியில் 24341 பேர் டெங்கு நோயினால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்சின் தகவல் தெரி­விக்­கின்­றது. இதில் அதி­கூ­டிய எண்­ணிக்­கை­யி­ன­ரான 6345 பேர் கடந்த ஜன­வரி மாதத்தில் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

கடந்த 11 மாதங்­களில் தலை­நகர் கொழும்பில் 7978 பேர் டெங்­கினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அதற்­க­டுத்­த­ப­டி­யாக 3384 பேர் கம்­பஹா மாவட்­டத்திலும் யாழ். மாவட்­டத்தில் 1436 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். கொழும்பு மாந­க­ர­சபைப் பிரிவில் மாத்­திரம் குறித்த காலப்­ப­கு­தியில் 2166 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பதி­வா­கி­யுள்­ளது.

வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் தற்­போது பரு­வ­மழை ஆரம்­பித்­துள்­ளதால் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்­பட்­டுள்­ள­தாக பொது­மக்கள் சுட்டிக் காட்­டு­கின்­றனர்.

இது­கு­றித்து மத்­திய மற்றும் மாகாண சுகா­தார அமைச்­சுக்கள், திணைக்­க­ளங்கள், பிராந்­திய சுகா­தார வைத்­திய அதி­காரி காரி­யா­ல­யங்கள், சுகா­தார வைத்­திய அதி­காரி அலு­வ­ல­கங்கள் அவ­சர கவனம் செலுத்த வேண்டும் என கோரப்­ப­டு­கின்­றது.

சீரற்ற கால­நி­லையைத் தொடர்ந்து டெங்கு நோய் தடுப்பு நட­வ­டிக்­கைகள் அண்­மைக்­கா­லத்தில் சற்று மந்­த­க­தியை அடைந்­துள்­ளன. அரச மற்றும் தனியார் அலு­வ­ல­கங்­களில் நடை­பெற்­று­வந்த வாரத்தின் ஒரு நாள் துப்­பு­ரவுப் பணி­களும் தொடர்ச்­சி­யாக நடை­பெ­றாது தற்­போது கைவி­டப்­பட்­டுள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது.

உள்­ளூராட்சி சபை­களின் தின­சரி கழி­வ­கற்றல் பணி­க­ளிலும் பல்­வேறு பிர­தே­சங்­களில் பாதிப்­பேற்­பட்­டுள்­ளது. வடி­கான்கள் முறை­யாக உரிய காலத்தில் துப்­பு­ரவு செய்­யப்­ப­டா­த­தினால் நீண்ட காலத்­திற்கு மழைநீர் தேங்கி நிற்கும் அவலம் காணப்­ப­டு­கின்­றது.

பாட­சா­லைகள், பாட­சா­லை­க­ளுக்­க­ரு­கி­லுள்ள சுற்­றுப்­பு­றச்­சூழலில் காணப்­படும் குப்பை கூளங்கள் தின­சரி அகற்­றப்­ப­டா­த­தினால் சுகா­தார சீர்­கேடு ஏற்­பட்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது. இதே போன்று மக்கள் குடி­யி­ருக்­காத வெற்றுக் காணி­களில் நாட்பட்ட குப்பை கூளங்கள் அகற்றப்படாது காட்சியளிக்கின்றன. இவை குறித்தும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், உள்ளூராட்சி சபைகளின் அதிகாரிகள் அவசர கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரப்படுகின்றது.