பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து சுமார் 30 ற்கும் அதிகமான ஆசிரியர் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்றும்,நாளையும் முன்னெடுத்துள்ள சுகயீன விடுமுறை போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட பாடசாலைகளின் ஆசிரியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள அதிகமான பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் செல்லவில்லை.

சில பாடசாலைகளுக்கு மாணவர்கள் சென்று திரும்பிச் சென்றுள்ளனர்.மேலும் பல பாடசாலைகளுக்கு மாணவர்கள் சமூகமளிக்கவில்லை.

இன்று வியாழக்கிழமை மற்றும் நாளை வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்கள் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  1.