பாகிஸ்தானுக்கான சுற்றுப் பயணத்தையடுத்து இலங்கை கிரிக்கெட் அணியானது இந்தியாவுக்கு சுற்றுப் பயணமொன்றை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மேற்கொள்ளவுள்ளது.

அதன்படி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணியானது இந்திய அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரை எதிர்கொள்ளவுள்ளது.

முதலாவது போட்டி ஜனவரி மாதம் 05 ஆம் திகதி குவாதியிலும், இரண்டாவது போட்டி 07 ஆம் திகதி இன்டோரிலும், மூன்றாவது போட்டி 10 ஆம் திகதி புனேயிலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

05 January - 1st T20I, Guwahati

07 January - 2nd T20I, Indore

10 January - 3rd T20I, Pune