தலைமன்னார் கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்கிய நிலையில் 18 பொதிகளைக்கொண்ட ஒரு தொகுதி பீடி இலைகளைக் கடற்படையினர் நேற்று புதன் கிழமை  மாலை மீட்டுள்ளனர். 

தலைமன்னார் கடற்கரை பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட  சோதனை நடவடிக்கையின் போது குறித்த 18 மூடைகளில் கரை ஒதுங்கிய 840 கிலோ கிராம் பீடி இலைகளைக் கடற்படையினர் மீட்டுள்ளனர்.

அதனைச் சோதனையிட்ட போதே குறித்த பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட பீடி இலைகள் கொண்ட 18 பொதிகளும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் சுங்க திணைக்கள அதிகாரிகளிடம் கடற்படையினர்  ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.