சீரற்ற காலநிலையால் தமது வீடுகள் வெள்ளத்தில் மூழ்கும் போது பெரியவர்களுக்கு ஏற்படும் தாக்கம் சிறுவர்களிடத்தில் ஏற்படுவதில்லை. 

தனது வீட்டிற்கு முன் தண்ணீர் நிறைந்திருப்பதை கண்டவுடன் தண்ணீரில் குதித்து விளையாடவே எத்தனிப்பர். அதனை பெரியவர்கள் தடுப்பதும் இல்லை.

 தனது வீட்டுக்கு முன்பாகதானே விளையாடுகின்றார்கள் என பெற்றோர்களும் கணக்கில் கொள்வதில்லை. ஆனால் இவ்வாறான சந்தர்ப்பங்களில் விளையாட்டு விபரீதமாகியும் விடுகின்றது.

இவ்வாறானதொரு விபரீத சம்பவமே  இன்று வத்தளை அவரகொட்டு பகுதியில் பதிவாகியுள்ளது.

அதாவது தனது வீட்டுக்கு முன்பாக நிறைந்திருந்த வெள்ள நீரில் விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுவர்கள் திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

9 மற்றும் 16 வயதுடைய சிறுவர்களே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

சடலங்கள் இராகம போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால்  மேல்மாகாணத்தில் மாத்திரம் 253028 பேர் பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.