அனுராதபுரம் றம்பாவே பகுதியில் இன்றுகாலை இடம்பெற்ற  விபத்தில் பிரபல உணவக உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை ஏ-9 வீதியில் றம்பாவே சந்திக்கு அருகாமையில் நடை பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளை யாழில் இருந்து சென்ற கெப் ரக வாகனம்  மோதியதில் படுகாயமடைந்த இவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் றம்பாவே பகுதியை சேர்ந்த பந்துல எனப்படும் 43 வயது நபரே இவ்வாறு உயிரழந்துள்ளதுடன் ,விபத்து தொடர்பாக றம்பாவே பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த நபர் றம்பாவே பகுதியில் “தாமரை இலை” (நெலும் கொல)என்ற பெயருடைய  பாரம்பரியமான உணவகம் ஒன்று நடத்தி வந்ததுடன் தென்பகுதிக்கு செல்லும் அநேகமான யாழ்ப்பாணம் உட்பட வடபகுதி தமிழ்மக்கள் மற்றும் சாரதிகள்  இவரது உணவகத்திற்கு சென்று உணவருந்தி செல்வதால் வடபகுதி மக்களுக்கு இவர் நன்கு பரீட்சயமான நபராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.