மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் 56 மைல் கல் பகுதியில் சீரற்ற கால நிலை காரணமாக பாரிய மரம் ஒன்று இன்று காலை(25) முற்றாக வீதி நடுவில் முறிந்து விழுந்துள்ளது.
இதன் காரணமாக பிரதான பாதை ஊடாக போக்குவரத்தை மேற்கொண்ட வாகனங்கள் மணல் ஏற்றி சென்ற டிப்பர்கள் உட்பட அனைத்தும் சுமார் இரண்டு மணித்தியாளங்களுக்கு மேலாக வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டுருந்தன.
குறித்த விடயம் தொடர்பாக இசைமாலைதாழ்வு கிராம சேவையாளர் வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுக்கு அறிவிக்கபட்ட போதிலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இரண்டு மாணித்தியாளங்களுக்கு மேலாக வருகை தரவில்லை என காத்திருந்த சாரதிகள் விசனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் குறித்த விடையம் தொடர்பாக அறிந்து கொண்ட நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் ரொஜன் ஸ்டாலின் உடனடியாக தனது சொந்த முயற்சியில் குறித்த பாரிய மரத்தினை தனது ஊழியர்களை கொண்டு அகற்றி போக்குவரத்து நெரிசலை சரி செய்த போதிலும் இறுதிவரை வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் குறித்த பகுதிக்கு வருகை தரவில்லை என மக்கள் விசனம் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM