(நா.தினுஷா)

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 52 நாள் எஞ்சியுள்ள நிலையில் அமைச்சர் சஜித் பிரேமதாசவை நாட்டின் ஜனாதிபதியாக்குவோம்  என்று அமைச்சர் ஹரிண் பெர்னாண்டோ தெரிவித்தார். 

களுத்துறை - மதுகம பிரதேச்சத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்துக்கொண்ட உரையாற்றும்போது இதனை தெரிவவித்த அவர்  மேலும் கூறியதாவது ; 

சஜித் பிரேமதாசவுக்கு இருக்கும் அரசியல் அனுபவம் ஸ்ரீலங்கா  பொதுஜன பெரமுனவிள் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்வுக்கு இல்லை.  அவர் மாகாணசபையின் நிர்வாகத்தை கூட அவர் நிர்வாகித்தது இல்லை. அதேபோன்று சஜித் ஜனநாயகத்துக்கு முக்கியத்துவம் வழங்குபவர். ஆனால் கோத்தாபய சர்வாதிகாரமாக செய்றபட கூடியவர். சஜத்துக்கு எதிராக குற்றச்சாட்டுக்களோ, கொலை  குற்றச்சாட்டுக்களோ இல்லை. அவர் மனித நேயமிக்கவர் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.