முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் முன்பாக முல்லைத்தீவு நீதிமன்ற சட்டதரணிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் (23) முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அவமதித்தமை மற்றும் சட்டதரணிகள் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் நேற்று முன்தினத்திலிருந்து சட்டதரணிகள் வடக்கு கிழக்கு எங்கும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். 

அத்தோடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர். இதன் தொடர்ச்சியாக இன்றையதினமும் முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக கறுப்பு துணியால் வாயை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.