உலகில் அனைத்து பகுதிகளிலும் ஏற்படும் பாதிப்புகளுக்கு உதவிகரம் நீட்டும் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அமைப்பு இந்தியாவின் சுகாதார துறையின் முன்னேற்றத்தை பாராட்டி இந்திய பிரதமர் மோடிக்கு “குளோபல் கோல்கீப்பர்” விருது வழங்கி கௌரவித்துள்ளது.
2014 ஆம் ஆண்டில் பிரதமர் மோடி ஆரம்பித்த தூய்மை இந்தியா திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காக பில்கேட்ஸின் மைக்ரோசாப்ட் நிறுவனம் "பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேசன்" அமைப்பின் சார்பில் இந்த விருது வழங்கியுள்ளது. இவ் விருதினை இன்று காலை நியூயோர்க்கில் வைத்து பில்கேட்ஸிடம் இருந்து பிரதமர் மோடி பெற்றுக் கொண்டார்.
இதன் போது பேசிய பிரதமர் மோடி,
இந்த விருது தனக்கானது அல்ல என்றும் தூய்மையை அன்றாட வாழ்வில் கடைப்பிடித்து வரும் கோடிக்கணக்கான மக்களுக்கு உரித்தானது என்றும் பெருமிதத்துடன் தெரிவித்தார். 130 கோடி இந்திய மக்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தாள் வருடத்தில் இந்த விருதை வாங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார்.
பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் தொண்டு நிறுவனத்தின் அறிக்கையின் படி, இந்தியாவின் கிராமப்புறங்களில் மேம்பட்ட சுகாதார வசதிகள், குழந்தைகளின் இதய பிரச்சினைகள், பெண்களின் சாரந்த சுகாரதாரம் ஆகியவை அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 11 கோடிக்கும் அதிகமான கழிவறைகள் கட்டப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM