இறுதி யுத்தத்தின்போது, முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் நிகழ்வில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுடரேற்றி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்ததுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் மாவை சேனாதிராஜா அஞ்சலி செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், மத குருமார்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.