2012 இல் பட்மான் batman  திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருந்தவேளை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் புதிய ஜோர்க்கர் திரைப்படம் குறித்து தங்கள் கவலையை வெளியிட்டுள்ளதுடன் குறிப்பிட்ட திரைப்படத்தை தயாரித்து வரும் வோர்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை  துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிராக குரல்கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கொலராடோவில் 2012 இல் டார்க்நைட் ரைசஸ் படத்தை பார்த்துக்கொண்டிருந்தவர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்ட ஒருவரின் தாயார் ஜோக்கர் திரைப்படத்தின்  டிரெய்லர்களை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிரான அமைப்பொன்றை நடத்திவரும் சண்டி பிலிப்சும் அவரது கணவரும்  துப்பாக்கி பிரயோகத்தில் பலியாகிய மூவரின் குடும்பத்தவர்களுடன் இணைந்து இது குறித்த கடிதமொன்றை வோர்னர்  பிரதர்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பிவைத்துள்ளனர்.

ஜோக்கர் படத்தின் டிரெய்லர்களை பார்த்தவேளை நான் அதிர்ச்சியடைந்தேன் என பிலிப்ஸ் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட படத்தில் தேவையற்ற வன்முறைக்காட்சிகள் உள்ளள அவை எனக்கு அச்சமூட்டியுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட படம் நிறுவனம் தனக்கே உரிய பொறுப்புணர்வை பி;ன்பற்றவில்லை பொதுமக்கள் குறித்து கரிசனை கொண்டிருக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

துப்பாக்கி சீர்திருத்தங்களிற்காக பிரச்சாரம் செய்யுமாறும் ,தேசிய துப்பாக்கி சங்கத்திற்கு சந்தா செலுத்தும் வேட்பாளர்களிற்கு பணம் வழங்குவதை நிறுத்துமாறும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வோர்னர் புரொஸ் நிறுவனத்தினை கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த கடிதத்திற்கு பதில் அளித்துள்ள  வோர்னர் பிரதர்ஸ் நிறுவனம் இந்த படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது கற்பனை கதாபாத்திரமே நாங்கள் வன்முறையை ஊக்குவிக்கவில்லை என தெரிவித்துள்ளது.