முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டிருந்த மனநலம் குன்றிய முதியவர், வல்லை பாலத்துக்கு அண்மையாக கடல்நீரேரியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனைக்கோட்டையைச் சேர்ந்த 68 வயதுடைய முதியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் வல்லை பாலத்துக்கு அண்மையாக கடல்நீரேரியில் ஒருவரின் சடலம் தலைக்குத்தாகக் காணப்படுவதாக இன்று காலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இன்று நண்பகல் நீதிவான் முன்னிலையில் சடலத்தை மீட்டனர்.

இதன்போதே உடுப்பிட்டி முதியோர் இல்லத்திலிருந்து காணாமல் போயிருந்த மனநலம் குன்றிய முதியவர் என அடையாளம் காணப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.