மாணவனின் மண்டையோட்டிலிருந்த பல்: வினோதமான காரணத்தால் அதிர்ச்சியடைந்த வைத்தியர்கள்

Published By: J.G.Stephan

25 Sep, 2019 | 03:20 PM
image

போர்த்துக்கல் நாட்டில் 14 வயது சிறுவன் உடல்நிலை சரியில்லாமல் மற்றும் பயங்கரமான தலைவலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், ஸ்கேன் அறிக்கையில் என்ன காரணம் என்பது தெரியவந்துள்ளது.

போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்த 14 வயது சிறுவன் கடந்த சில தினங்களாகவே, உடல் நிலை சரியில்லாமலும், கடுமையான தலைவலியாலும் அவதிப்பட்டு வந்துள்ளான்.

இதனால் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை மேற்கொண்ட போது, வழக்கம் போல் தலைவலிக்கு கொடுக்கப்படும் மாத்திரைகள் கொடுக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வைத்தியர்கள் அனுப்பியுள்ளனர்.

இருப்பினும் தொடர்ந்து வலி இருந்ததால், மீண்டும் வந்த போது, அதே போன்று வைத்தியர்கள் செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் தொடர் வலி காரணமாக வைத்தியர்கள் ஸ்கேன் எடுத்து பார்க்கலாம் என்று முடிவு செய்த போது, மண்டை ஓட்டு பகுதியில் ஏதோ சிறிதாக இரும்பு உலோகமோ அல்லது கால்சியம் கட்டி போன்று ஏதோ இருப்பதைக் கண்டுள்ளனர்.

இதையடுத்து அதற்கு அறுவை சிகிச்சை உடனடியாக மேற்கொண்ட போது, அது பல் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

அதன் பின் இது குறித்து மாணவனிடம் கேட்ட போது, சிறுவன் கால்பந்தாட்டம் விளையாடிக் கொண்டிருந்த போது, அருகில் இருந்த சிறுவனின் வாய், இவன் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதனால் அந்த சிறுவனின் பல் தான் இப்படி இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

சிறுவன் சிகிச்சைக்கு 2 நாட்களுக்கு பின் வீட்டிற்கு பத்திரமாக அனுப்பப்பட்டான். ஆனால் இந்த சிறுவனின் மண்டை ஓட்டில் பல் வரும் அளவிற்கு மோதிய நபர் யார் என்பது குறித்து ஆராயப்பட்டுவருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right