தென்னாபிரிக்கா, அவுஸ்­தி­ரே­லியா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய மூன்று அணி களுக்கிடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் மேற்கிந்தியத் தீவுகளில் எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடை பெறவுள்ளது.

கயானா, செயின்ட்கிட்ஸ், பார்­படோஸ் ஆகிய இடங்­களில் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன.

சமீ­பத்தில் கயானாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

இதனால் மேற் கிந்தியத் தீவுகள் செல்ல இருக்கும், அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் அணி­யி­ன­ருக்கு, அந்த நாட்டு கிரிக்கெட் சபை மருத்­துவக் குழு எச்­ச­ரிக்கை விடுத்து இருக்­கி­றது.

ஜிகா வைரஸ் உரு­வாக கார­ண­மாக விளங்கும் கொசுவின் கடியில் இருந்து தப்­பிப்­பது உட்­பட பல்­வேறு ஆலோ­ச­னைகள் வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.