தமிழ் இசையை வளர்க்கும் நோக்கில் கலாமஞ்சரி எனும் அமைப்பு கடந்த ஆண்டு சிங்கப்பூரில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

தமிழ் இசையை வளர்க்கும் நோக்கில் கலாமஞ்சரி எனும் அமைப்பை திருமதி செளந்தர நாயகி வயிரவன் ஆரம்பித்து வைத்தார். 

2,000 ஆண்டு பழமை வாய்ந்த தமிழ் மொழி மற்றும் தமிழ் இசை இரண்டும் தமிழ் கலாச்சாரத்தின் கூறுகளை எடுத்துக் கூறுவதாக உள்ளன.

பல அறிஞர்கள், சான்றோர்கள் இயற்றியுள்ள தமிழ் இசைப் பாடல்கள் மற்றும் நூல்கள், மக்கள் பின்பற்ற வேண்டிய இன்றியமையாத கருத்துகளைக் கொண்டு இருக்கின்றன. ஆனால் அவை பெரிதும் பாடப்படாமலும் வெளியில் தெரியாமலும் இருக்கின்றன.

இப்படி கருவூலமாக திகழும் தமிழ் இலக்கியங்கள், தமிழ் சான்றோர் மற்றும் அறிஞர்களின் பாடல்களை எடுத்து நிகழ்ச்சிகள் மூலம் தமிழ் இசையை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே கலாமஞ்சரியின் நோக்கம்.

இது வரை கலாமஞ்சரி அமைப்பு திருக்குறள், பாரதியார், பாரதிதாசனார், ஆத்திசூடி, தமிழ் இசை மூவரில் ஒருவரான முத்துத்தாண்டவர் போன்றோரை மையமாக வைத்துநிகழ்ச்சிகள் படைத்துள்ளதாக அவ் அமைப்பின் ஸ்தாபகர் திருமதி: செளந்தர நாயகி வயிரவன் கூறுகிறார்.

அவர் கலாமஞ்சரியின் நோக்கம் குறித்து மேலும் கூறுகையில்,

இந்நிகழ்ச்சிகளில், சிங்கப்பூரில் உள்ள கலைப் பாடசாலைகளின் மாணவர்கள் பலர் பங்குபற்றி பயன்பெறுகின்றனர்.

இப்பாடல்களில் உள்ள கருத்துகள் பல இனத்தவரிடையும் போய் சேர வேண்டும் என்ற நோக்கில், இப்பாடல்களுக்கு சான்றோர் வழங்கிய மொழிபெயர்ப்புகள் இருக்குமேயானால், அவற்றையும் நிகழ்ச்சிகளில் பயன்படுத்தி மற்ற இனத்தவரிடமும் தமிழ் இசையைக் கொண்டு சேர்க்கின்றது.

மேலும் தமிழ் இசைப் பற்றிய பேச்சுப் போட்டி, சிறப்புப் பேச்சு, கலந்துரையாடல்கள் மூலமாகவும் தமிழ் இசையை வளர்ப்பது, கலாமஞ்சரியின் நோக்கம் என அவர் மேலும் தெரிவித்தார்.