டெல்லி மற்றும் புனே அணிகள் மோதிய போட்­டியில் டக்வோர்த் லூயிஸ் முறைப்­படி புனே அணி 19 ஓட்­டங்களால் வெற்­றி­பெற்­றது.

நேற்று விசா­கப்­பட்­டணத்தில் நடை­பெற்ற இந்தப் போட்­டியில் இரண்­டா­வது துடுப்­பெ­டுத்­தா­டிய புனே அணிக்கு 11 ஓவர்கள் மாத்­தி­ரமே விளை­யாடக் கிடைத்­தது. அத்­தோடு மழை குறுக்­கிட்­டதால் போட்டி கைவி­டப்­பட்­டது.

இந்தப் போட்­டியில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற புனே அணித் தலைவர் டோனி, டெல்லி அணியை முதலில் துடுப்­பெ­டுத்­தா­டும்­படி பணித்தார்.

அதன்­படி டெல்லி அணியின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளாக டி கொக் மற்றும் ஐயர் ஆகியோர் கள­மி­றங்­கினர். இதில் டி கொக் 2 ஓட்­டங்­க­ளுடன் வெளி­யேற, அடுத்து நாயர் கள­மி­றங்­கினார். இவர் அடித்­தாடி ஓட்­டங்­களைச் சேர்த்­துக்­கொண்­டி­ருக்க, மறு­மு­னையில் நின்ற ஐயர் 8 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார்.

அதன்­பி­றகு நாய­ருடன் சம்சன் ஜோடி சேர்ந்தார். இவர் 10 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார். அதி­ர­டி­யாக ஆடிக்­கொண்­டி­ரு­ந்த நாயர் 41 ஓட்­டங்­களைப் பெற்று ஆட்­ட­மி­ழக்க அடுத்­த­டுத்து வந்த பாண்ட்(4), டுமினி(14), மொரிஸ்(38) என ஓட்­டங்­களைப் பெற்று ஆட்­ட­மி­ழந்­தனர்.

நிர்­ண­யிக்­கப்­பட்ட 20 ஓவர்­கள் நிறைவில் டெல்லி அணி 6 விக்­கெட்­டுக்­களை இழந்து 121 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது.

121 ஓட்­டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் கள­மி­றங்­கிய டோனி தலை­மை­யி­லான புனே அணியின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளாக ரஹானே மற்றும் கவாஜா ஆகியோர் கள­மி­றங்­கினர்.

இந்த ஜோடி ஆரம்­பத்­தி­லி­ருந்து அதி­ர­டி­யாக ஆடி ஓட்­டங்­களைக் குவிக்க 19 ஓட்­டங்­க­ளுடன் கவாஜா ஆட்­ட­மி­ழந்தார். அதன்­பி­றகு ரஹா­னே­வுடன் பெய்லி ஜோடி சேர்ந்தார். புனே அணி 11 ஓவர்­க­ளுக்கு 1 விக்­கெட்டை மாத்­திரம் இழந்து 76 ஓட்­டங்களை பெற்­றி­ருந்த வேளையில் மழை குறுக்­கிட்­டது.

தொடர்ந்து மழை பெய்­து­கொண்­டி­ருந்­ததால் போட்டி நிறுத்­தப்­பட்டு டக்வோர்த் லூயிஸ் முறைப்படி 19 ஓட்டங்களால் புனே அணிக்கு வெற்றி வழங்கப்பட்டது.

களத்தில் ரஹானே 42 ஓட்டங்களுடனும், பெய்லி 8 ஓட்டங்களுடனும் இருந்தனர்.