(செ.தேன்மொழி)

ஹோமாகம பகுதியில் கட்டட நிர்மான பணியில் ஈடுப்பட்டிருந்த மூவர் கீழே விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹோமாகம- பிட்டிபன மாஹேன பகுதியில் நேற்று மாலை நான்குமாடி கட்டிட நிர்மான பணியில் ஈடுப்பட்டிருந்த மூன்று பேரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதன்போது படுகாயமடைந்திருந்த மூன்று பேரும் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து , ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியா - சிதம்பரபுரம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

சம்பவத்தின் போது காயமடைந்த மற்றைய நபர்களில் ஒருவர் கலுபோவில வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்ட நிலையில் இருவரும் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ஓமாகம பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.