வவுனியா நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் தரம் 3 இல் கல்வி பயிலும் தனது மகள் பாலியல் துர்நடத்தைக்குள்ளதானதாக தெரிவித்து குறித்த மாணவியின் தந்தையால் சமூகவலைதளங்களில் காணொளி ஒன்று கடந்தவாரம் வெளியிடப்பட்டிருந்தது. 

இதேவேளை குறித்த சம்பவத்தில் மாணவியின் தந்தையால்  இருவர் தாக்கபட்டதுடன், நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கபட்டமைக்கு அமைவாக இருவர் கைதுசெய்யப்பட்டு  நீதிமன்றில் முன்னிலைபடுத்தபட்டு விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளனர்.

குறித்த தந்தையின் செயற்பாட்டிற்கு எதிர்பு தெரிவித்தும், அவ்வாறான சம்பவங்கள் எதுவும் நடைபெறாத நிலையில், மாணவியின் தந்தையார் பாடசாலைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காகவே இவ்வாறான பொய் பரப்புரையை மேற்கொண்டதாக தெரிவித்து நெடுங்கேணி பகுதியை சேர்ந்த நூற்றுகணக்கான பொதுமக்கள், பழையமாணவர்கள், சமூக ஆர்வலர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் காலை 8.30 மணிக்கு வவுனியா நெடுங்கேணி மகாவித்தியாலத்திற்கு முன்பாக ஆரம்பமாகி வவுனியா வடக்கு பிரதேச செயலகம் வரை சென்று பிரதேச செயலாளரிடம் மகஜர் கொடுக்கபட்டிருந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மதிகெட்டு நடப்பவனுக்கு மன்னிப்பு குடுக்காதே, மாணவர்களின் கல்வி வளர்சியை சீரழிக்காதே, முகநூலில் வந்தது பொய்யான குற்றச்சாட்டு என்ற வாசகங்கள் பொறிக்கபட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

இதேவேளை குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுங்கேணி பகுதியில் பல வர்த்தக நிலையங்களும் இன்று மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.