நியூசிலாந்து செல்லும் இங்கிலாந்து அணியில் இருந்து  ஜோனி பெயர்ஸ்டோ நீக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணி அடுத்த மாதம் முதல் நியூசிலாந்து சென்று அங்கு இருபதுக்கு - 20, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. 

இந் நிலையில் அங்கு விளையாட உள்ள 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  அதில் இங்கிலாந்து அணியின் முன்னணி வீரரான ஜோனி பெயர்ஸ்டோ நீக்கப்பட்டுள்ளார். 

உலக கிண்ணத்துக்குப் பிறகு நடந்த ஆஷஸ் தொடரில்  பெயர்ஸ்டோவின் ஓட்ட குவிப்பு வேகம் வெறும் 19.45 யாக இருந்ததால் இந்த முடிவு என்று கூறப்படுகிறது. அதனால் நியூசிலாந்து  தொடரில் ஜோஸ் பட்லர் விக்கெட் காப்பாளராக இருப்பார்.

அது மாத்திரமன்றி டெஸ்ட் அணியில்  டோம் சிபிலி, ஜெக் கிராலி ஆகியோர் முதல்முறையாக இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.