போகாவத்தை இராவணாகொட பிரதான பாதையில் நேற்று இரவு மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக தலவாக்கலை மற்றும் நாவலப்பிட்டி பகுதிக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

தற்போது, மலையகத்தில் காணப்படும் சீரற்ற காலநிலை காரணமாக தலவாக்கலை இராவணாகொட பிரதான பாதையின் அருகே பல இடங்களில் சிறிய மற்றும் பாரிய மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

போகவத்தை தோட்ட பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டிருந்ததனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

இன்று காலை பெக்கோ இயந்திரத்தை பயன்படுத்தி மண்சரிவை அகற்றியதன் பின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியதாக திம்புள்ள - பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனங்கள் தங்குதடையின்றி பயணிக்க கூடிய நிலை காணப்பட்டாலும் பாதையில் முகில் கூட்டம் அதிகமாக காணப்படுவதினால் வாகன போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பொலிஸார் வாகனங்களை கவனமாக செலுத்துமாறு கேட்டுக் கொள்கின்றனர்.

(க.கிஷாந்தன்)