பெளத்த தேரர்களுக்கான சட்டத்தின் பாரபட்சம் எமது நாட்டை மேலும் ஒரு இருண்ட யுகத்திற்க்கு இட்டு செல்லும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
பெளத்த பிக்குவின் உடலை நீதிமன்ற உத்தரவை மீறி இந்துக்களின் பகுதியில் தகனம் செய்தமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்த வளாகத்தில் இறைபதமடைந்த பௌத்த மதகுருவின் நல்லடக்க தகனம் மேற்கொள்ளப்பட்டமையானது நமது தாற்ப்பரியங்களை தகர்த்தெறியும் நடவடிக்கையாகும்.
காவல்துறையினருக்கு பௌத்த மதகுருக்களை மீறி செயற்பட முடியாதென்றால் இந்துக்களின் மனங்களை புண்படுத்துவது மாத்திரம் கைவந்த கலையாகவிட்டதோ என எண்ணத் தோன்றுகின்றது.
தேரர்களுக்கு சட்டத்தின் மூலமான நீதிமன்ற அதிகாரத்தை விட ஒரு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா என்று நான் கேள்வியெழுப்ப விரும்புகின்றேன்,
மதங்களிடையே பாரபட்சமாக காட்டப்படும் நீதி இந்த அரசாங்கத்தின் போலி நல்லிணக்க செயற்பாடுகளையும் அதற்கு முண்டு கொடுக்கும் அரசியல்வாதிகளினதும் இயலாமையை இன்று தோலுரித்துக் காட்டியுள்ளது,
கன்னியா வெந்நீருற்றை அண்மித்த ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தை தடுக்க முன்னின்ற சட்டம் பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்ய நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதற்கு பாதுகாப்பளித்தது விந்தையாகவுள்ளது
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற உண்மையான நிலைமை இந்த நாட்டில் ஏற்படுத்தப்படும் வரை தமிழ் மக்கள் மனதிலுள்ள அச்ச உணர்வை போக்க முடியாது,
அத்துடன் காவியுடை போர்த்தியுள்ளமையினால் அவர்கள் யாரையும் விட உயர்ந்தவர்கள் என அரசியலமைப்பு கூறவில்லை அவர்களுக்கு என சிறப்பு சட்டங்கள் இல்லை,
காவியுடை அணிந்தால் அவர்கள் எந்த அடாவடியிலும் ஈடுபட முடியும் என்ற எண்ணத்தை மாற்றும் அளவுக்கு இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் வழங்கப் போகும் தீர்ப்பு அமைய வேண்டும்,
அத்துடன் சட்டத்தரணிகள் தாக்கப்பட்டமையையும் ஒருபோதும் ஏற்க முடியாது, அதனுடன் தொடர்புடையவர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பில் உடனடியாக செயல் பட முடியாத நிலைமையில் கூட்டமைப்பின் தமிழ் தலைமைகள் இருந்துள்ளமை வெட்கப்பட வேண்டிய விடயம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM