(நா.தினுஷா)

தொடர் மழையின் காரணமாக கொழும்பு தெமட்டகொடை மஹாவில  பிரதேச  வீடுகளில் மழை நீர் பெருக்கெடுத்தமையினால் தாம் பெரும் அசௌகரியத்தை சந்தித்துள்ளதாகவும் தமக்கு மாற்று வலியை ஏற்படுத்தி கொடுக்குமாறும் கோரி அப் பகுதி மக்கள் இன்று பேஸ் லைன் பிரதான வீதியை மறைத்து ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

 

தெமடகொடை மேம்பாலத்தின்  இரு மறுங்கிலும் உள்ள கம்பங்களில் கயிற்றை கட்டி  வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தமையினால் இன்று மாலை 5.30 மணியலவில் வீதியின் இரு மறுங்கிலும்  பாரிய வீதி நெரிசல் ஏற்பட்டது.  

போக்குவரத்து பொலிசார் மக்களிடம் பேசி பிரச்சினைக்கு தீர்வுக் காண முயற்சித்த போதும், தமது ஆர்மபாட்டத்தை கைவிட மக்கள் தயாரா இருக்கவில்லை. தொடர்ச்சியாக  வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் வாகன சாரதிகள் வீதியில் இறங்கி ஆர்பாட்டக்காரர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுப்பட்டனர். ஆனால் மக்கள் தமது ஆர்பாட்டைத்தை கைவிட முன்வர வில்லை. 

இதனால் அந்த வீதியை போக்குவரத்துக்காக பயன்படுத்தும் மக்களும் பெரும் அசௌகரியத்தை எதிர்க்கொண்டார்கள்.