பாகிஸ்தான் சென்றது இலங்கை கிரிக்கெட் அணி

By Vishnu

24 Sep, 2019 | 07:03 PM
image

பாகிஸ்தான் அணியுடன் சர்வதேச ஒருநாள் மற்றும் இருபதுக்கு - 20 போட்டிகளில் பங்கேற்கவுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது இன்றைய தினம் பாகிஸ்தானுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியானது பாகிஸ்தான் புறப்படுவதற்கு முன்னதாக கொழும்பில் உள்ள இலங்கை கிரிக்கெட் தலைமையகத்தில் சமய வழிபாடுகளிலும் கலந்து கொண்டது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு இலங்கை அணியை லஹிரு திரமான்ன வழிநடத்தவுள்ளார். அதவேளை மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரை தசூன் சானக்க வழிநடத்தவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Match Schedule

27 Sep – 1st ODI, Karachi

29 Sep – 2nd ODI, Karachi

2 Oct –   3rd ODI, Karachi

5 Oct – 1st T20I, Lahore

7 Oct – 2nd T20I, Lahore

9 Oct – 3rd T20I, Lahore

முக்கிய செய்திகள்

icon-left
icon-right