யாழ்ப்பாணம்  குருநகர் பகுதியில் தனிமையில் வசித்த மூதாட்டி நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குருநகர் பேங்க் சால் வீதியைச் சேர்ந்த ஜோசப் மேரி ஜோசப்பினா (வயது 61) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

இரண்டு பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வந்த நிலையில் மூதாட்டி எந்தவித துணையுமின்றி தனிமையில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு மழை பெய்து கொண்டிருந்த பொழுது மூதாட்டியை பார்க்கச் சென்ற உறவினர்கள் அவர் மூச்சடங்கிக் காணப்பட்டதையடுத்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றிருந்தனர்.

எனினும் மூதாட்டி இறந்துவிட்டதாக மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

இறப்புத் தொடர்பில் திடீர் இறப்பு விசாரணை அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.