பாகிஸ்தானில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதோடு 5 பேர் உயிரழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

 பாகிஸ்தான் லாகூரில் இவ்வாறு 5.8 ரிச்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

அத்தோடு பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவிலும் சில பகுதிகளில் உணரப்பட்டுள்ளதோடு ,  காஷ்மீர் பகுதியிலும் இவ்வாறு உணரப்பட்டதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்ட சில பகுதிகளில் உள்ள வீதிகள் பிளவுபட்டுள்ளதோடு , சில பகுதிகளில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.