(எம்.மனோசித்ரா)

கடும் மழை காரணமாக இன்று காலை வேளையில் கொழும்பில் சில வீதிகள் நீரில் மூழ்கியிருந்தமையால் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸ் தலைமையகம் அறிவித்திருந்தது.

இதனால் தொழிலுக்குச் செல்பவர்களும், பாடசாலை மாணவர்களும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர். 

கொழும்பு கொட்டாஞ்சேனை விகாரை முன்னாள் உள்ள வீதி, ஆமர் வீதி, பாபர் வீதி, புளுமென்டல் வீதி, சென் ஜேம்ஸ் வீதி, கோட்டை ரெக்லமேஷன் வீதி, ஜிந்துபிட்டி சந்தி, கிருலப்பனை பொலிஸ் நிலையத்திற்கு முன்னாலுள்ள வீதி, ஹைலெவல் வீதி, பேஸ்லைன் வீதி, ரொபட் குணவர்தன சந்தி மற்றும் தெமடகொட விகாரை ஆகிய வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.