ஹங்வெல்ல துப்பாக்கி பிரயோகத்துடன் தொர்புபட்ட சந்தேக நபர் மிரிஹான பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைபின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தது.

அங்கொட பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் 15ம் திகதி ஹங்வெல்ல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட  துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன்  இருவர் காயமடைந்துள்ளனர் . இதனுடன் தொடர்புபட்ட சந்தேக நபரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து துப்பாக்கி பிரயோகத்திற்கு பயன்படுத்தப்பட்ட இலக்கத்தகடு அற்ற மோட்டார் சைக்கில் ஒன்றும், தலைக்கவசம்  இரண்டும், உடற்கவசம் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிசார்  மேற்கொண்டு வருகின்றனர்.