நாங்குநேரி இடைத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளரை டில்லி தலைமை தான்அறிவிக்க வேண்டும்- திருநாவுக்கரசர்

Published By: Daya

24 Sep, 2019 | 04:46 PM
image

நாங்குநேரி தொகுதிக்கான சட்டப்பேரவை இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை டில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை தான் அறிவிக்க வேண்டும் என்று மக்களவை உறுப்பினரும், முன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவருமான திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, 

“தமிழ்நாடு மட்டுமல்ல எல்லா மாநிலங்களிலும் வேலை வாய்ப்புகளில் அந்தந்த மாநில மக்களுக்கு முன்னுரிமை தரவேண்டும். தமிழ்நாட்டில் உள்ள சாதாரண பணிகளுக்கு உத்தரபிரதேசம், பீகார் போன்ற வடமாநிலத்தில் அவர்களைக் கொண்டு நிரப்பினால், தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டுக் காத்திருப்பவர்களுக்கு எங்கே வேலை கொடுக்க முடியும்? நிச்சயமாக இதற்கு ஒரு வரைமுறை வேண்டும். 

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். பணிகள் தவிர்த்து மற்றவர்களுக்குத் தமிழகத்தில் உள்ள வேலைகள் தமிழகத்தில் உள்ளவர்களுக்கே கொடுக்கப்படவேண்டும். இதனை மொழிவாரியாக ,மாநில வாரியாக பேசுகிறோம் என நினைக்கக்கூடாது. இது எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும். இங்கே உள்ள வேலைகளை வெளிமாநிலத்தவர் கொண்டு நிரப்புவது கண்டனத்திற்குரியது. ரயில்வே உள்ளிட்ட எந்த துறையாக இருந்தாலும் அந்த துறையில் இருக்கும் உயரதிகாரிகள் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும். 

மத்திய மாநில அரசுகளும் இதில் கவனம் செலுத்த வேண்டும் . நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பது குறித்து அந்த தொகுதிக்குப் போட்டியிடும் காங்கிரஸ் பிரமுகர்களிடம் இருந்து விருப்ப மனு பெற்று வருகிறோம். அதன்பிறகு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் குழு ஆய்வு செய்து மூன்று பேர் அடங்கிய பட்டியலைத் தலைமைக்கு அனுப்ப வேண்டும். சட்டமன்ற மற்றும் மக்களவை, மாநிலங்களவை வேட்பாளர்களை அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் தலைமை தான் அறிவிக்க வேண்டும்.” என்றார்.

இதனிடையே இடைத்தேர்தல் நடைபெறும் மற்றொரு தொகுதியான விக்ரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி சார்பில் தி.மு.க. வேட்பாளராக நா. புகழேந்தி என்பவர் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் மு. க .ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜப்பானிலிருந்து சீனாவுக்கு செல்லும் பாண்டா கரடிகள்;...

2026-01-25 15:29:46
news-image

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு :...

2026-01-25 14:25:59
news-image

அமெரிக்காவில்  கடும் பனிப்புயல் ; மின்சாரம்...

2026-01-25 11:34:40
news-image

கனடா மீது 100% வரி விதிக்கப்படும்...

2026-01-25 11:15:15
news-image

சீன இராணுவத்தின் இரண்டாம் நிலைத் தளபதி...

2026-01-25 10:07:06
news-image

அமெரிக்க கடற்படைகள் ஈரானை நோக்கி நகர்த்தப்படுவதால்...

2026-01-24 13:54:37
news-image

அமெரிக்கா முழுவதும் கடும் பனிப்புயல் –...

2026-01-24 13:42:11
news-image

இந்தோனேசியாவில் கண்காணிப்பு விமானம் மலை மீது...

2026-01-24 12:00:03
news-image

பாகிஸ்தானில் திருமண நிகழ்வில் தற்கொலைத் தாக்குதல்:...

2026-01-24 11:36:52
news-image

இந்தோனேஷியாவில் மண்சரிவு : ஏழு பேர்...

2026-01-24 11:13:28
news-image

பாராளுமன்றத்தை கலைத்தார் ஜப்பான் பிரதமர் :...

2026-01-23 13:31:08
news-image

பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் பயணித்த கப்பல் விபத்து...

2026-01-23 12:26:05