ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலான இழுத்தடிப்பு மக்களுக்கு எதிரான பாரிய அநீதி

Published By: Vishnu

24 Sep, 2019 | 02:47 PM
image

ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் காணப்படும் இழுத்தடிப்பு மக்களுக்கு எதிரான பாரிய அநீதியாகும் என தெரிவித்த பெருநகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க , நாட்டின் தேவையை அறிந்த நாட்டுக்காக சேவையாற்ற கூடிய தொழில்துறைசார்  இளம் தலைமுறையின் தலைமைத்துவம் நாட்டுக்கு தேவை எனவும் குறிப்பிட்டார். 

தொம்பே பொதுச் சந்தை கட்டிடத்தை இன்றைய தினம் திறந்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

ஆகஸ்ட் 24 ஆம் திகதி ஐ.தே.க தலைவர்களுக்கான கூட்டம் ஒன்று ஒழுங்கு இடம்பெற்றது. இதன் போது ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்க தீர்மானித்தோம். கூட்டனியில் மற்ற உறுப்பினர்கள் அதை ஏற்றுகொண்டு நிலையில் இறுதி தீர்மானத்திற்கான கால எல்லையாக கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி காணப்பட்டது. 

ஆனால் அவ்வாறு இடம்பெறவில்லை. கட்சிக்குள் இழுத்தடிப்புகள் காணப்படுவதாகவே தெரிகின்றது. இது மக்களுக்கு எதிரான பாரிய அநீதியாகவே காணுகின்றேன். 

எனவே தான் ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்கள்  76 பேர் , ஏனைய கட்சிகளை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 30 பேரும் இணைந்து இதற்கான இறுதி தீர்மானத்தை எடுக்க தீர்மானிதோம். 

பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய முன்னிணியின் அனைத்து உறுப்பினர்களும் இது குறித்து கடந்த வாரம் கலந்துரையாடினோம். ஜனநாயக ரீதியில் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய இதுவே சிரயான முறையாகவும் காணப்படுகின்றது. 

வாக்குகள் அனைத்து இன மக்களிடமிருந்தும் கிடைக்கப்பெறும். நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல கூடிய தலைமைத்துவம் அவசியமாகும். விசேடமாக இளம் தலைமைத்துவங்கள் இதன் போது தேவைப்படுகின்றது. ஒரு குடுப்பத்தை சார்ந்தவர்கள் தேசிய பொருளாதாரத்தை கையாள்வதை தவிர்த்து இளம் சமூகத்தினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அவ்வாறானதொரு இளம் தலைமைத்துவங்களை எதிர்வரும் தேர்தல்களில் முன்னிறுத்துவோம் எனவும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58