அல்ஜீரியாவில் உள்ள மகப்பேற்று வைத்தியசாலையொன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 8 குழந்தைகள்  உயிரிழந்துள்ளன.

அல்ஜீயா நாட்டின் தென்கிழக்கு பகுதியில் 500 கிலோமீற்றர் (300 மைல்) தொலைவில் உள்ள வைத்தியசாலையில் அந்நாட்டு நேரப்படி அதிகாலை 3:50 மணியளவில் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் 11 குழந்தைகள், 107 பெண்கள் மற்றும் 28 ஊழியர்கள் மீட்கப்பட்டுள்ளார்கள்.

துரதிர்ஷ்டவசமாக எட்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன் சிலர் தீக்காயங்களுக்கும் புகையிலும் சிக்கி காயமடைந்துள்ளதுடன் பாதிக்கப்பட்டுமுள்ளனர். 

குறித்த  தீ விபத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.