சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையானது மேலும் 24 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய களுத்துறை, கேகாலை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கையானது நாளை முற்பகல் 11.30 மணிவரை அமுலில் இருக்கும்.