சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஆண்டின் அதிசிறந்த மகளிர் வீராங்கனைக்கான விருதை அமெரிக்காவின் மேகன் ராபினோ (Megan Rapinoe) தட்டிச்சென்றுள்ளார்.

இவ்வருட மகளிர் உலகக்கிண்ணத்தில் அதிக கோல்களைப் போட்டு தனது தாய்நாடு வெற்றிக்கிண்ணத்தை சுவீகரிப்பதற்கு Megan Rapinoe பாரிய பங்காற்றினார்.

இங்கிலாந்து கழகமட்ட போட்டிகளில் லிவர்பூல் அணி பல வெற்றிக்கிண்ணங்களை சுவீகரிப்பதற்கும் இவ்வருடத்தில் தரவரிசையில் மூன்றாமிடத்தில் நீடிப்பதற்கும் வழிசமைத்த Jurgen Klopp ஆண்டின் அதிசிறந்த பயிற்றுநருக்காக விருதை வெற்றிகொண்டார்.

லிவர்பூல் கழக அணியின் Alisson Becker ஆண்டின் அதிசிறந்த கோல்காப்பாளராக தெரிவானார்.

இவ்வருட போட்டிகளில் அதிசிறந்த கோலை போட்டவருக்கு பரிசளிக்கப்படும் புஸ்காஸ் விருது ஹங்கேரி அணியின் 18 வயதான Daniel Zsori க்கு பரிசளிக்கப்பட்டது.

கால்பந்தாட்ட நியதிகளை மதித்து, கால்பந்தாட்டத்தின் மகத்துவத்தை பேணி பாதுகாத்தமைக்கான விருது ஆர்ஜென்டினாவின் முன்னாள் வீரரும் தற்போதைய முகாமையாளருமான Marcelo Bielsa க்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.