சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஆண்டின் அதிசிறந்த வீரர் என்ற விருதை ஆர்ஜென்டீனாவின்  லியோனல் மெஸ்ஸி ஆறாவது தடவையாகவும் சுவீகரித்துள்ளார்.

சிறப்பாக செயல்படும் கால்பந்து வீரர்களுக்கு, ஆண்டுதோறும் பிபா சார்பாக சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த விருது வழங்கல் விழா இத்தாலியின் மிலான் நகரில் கோலாகலமாக நடைபெற்றது.

நடப்பாண்டுக்கான விருதை நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி வசமாக்கியுள்ளார். அவர் 46 வாக்குகள் பெற்று வான் டிஜிக் (Van Dijk) மற்றும் ரொனால்டோவைப் பின்னுக்குத் தள்ளி சிறந்த வீரருக்கான விருதை வென்றார். 

இதன் மூலம் பிபாவின் சிறந்த வீரர் விருதை ஆறாவது முறையாக மெஸ்ஸி பெற்றுள்ளார். நட்சத்திர வீரர் ரொனால் டோவும் ஆறு முறை சிறந்த வீரருக்காக விருதை பெற்றுள்ளார்.

சர்வதேச கால்பந்தாட்ட வீரர்கள், பயிற்றுநர்கள் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் அதிகாரிகள் என பலரும் இந்த விருது வழங்கல் விழாவில் பங்கேற்றிருந்தனர்.

ஆண்டின் அதிசிறந்த வீரருக்கான விருதுக்காக போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, பிரெஞ்ச் அணியின் இளம் வீரரான கைலியன் இம்பாப்பே ஆர்ஜென்டீனாவின் லியோனல் மெஸ்ஸி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

இதற்கு முன்னர் மெஸ்ஸி 2009, 2010, 2011, 2012 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் லியோனல் மெஸ்ஸி இந்த விருதை இதற்கு முன்னர் சுவீகரித்துள்ளதுடன், தொடர்ச்சியாக 3 வருடங்கள் இந்த விருதை வென்ற ஒரே ஒரு வீரராகவும் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.