இந்தோனேசியாவில் ஏற்பட்ட கலவரத்தினால் 20 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தோனசியாவின் பப்புவா மாகாணத்தின் வாமினா நகரில் உள்ள பாடசாலையொன்றில் உள்ள மாணவனை வேறு பகுதியை சேர்ந்த ஆசிரியர்  தாகத வார்த்தைகளால் திட்டினார் என தெரிவித்து அப்பகுதி மக்கள் பாரிய ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஆரப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட நூற்றுக்கும் அதிகமான மக்கள் வாகனங்களை உடைத்து , கடைகள் மற்றும் கார்களில் தீயிணை வைத்துள்ளனர்.

இந்நிலையில் இதில் சிக்கி பொதுமக்கள் உற்பட கலவரத்தை கட்டுப்படுத்த வந்த இராணுவ வீரர் ஒருவர் , 3பேர் உயிரிழந்துள்ளதோடு, பொதுமக்கள் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு மாணவர்களிடையே பொய்யான தகவலினை பரப்பி இவ்வாறான சம்பவங்களை உள்நோக்கத்துடன் சிலர் செய்து வருகின்றதாக அந்நாட்டு பொலிஸ் ஊடக அதிகாரி ஊடகங்களுக்கு தெரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.