நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையை தொடர்ந்து விமான பயணிகளுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான மழை வீழ்ச்சி காரணமாக 3 மணித்தியாலங்களுக்கு முன்னர் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்திற்கு பயணிகளை வந்தடையுமாறு விமானநிலைய நிர்வாக பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு விமானசேவைகள் வழமைபோல் இயங்குவதாகவும் , சீரற்ற காலநிலை காரணமாக சேவைகள் எதுவும் பாதிப்படையவில்லையென விமானநிலைய நிர்வாக பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் விமான பயணிகள் விமானநிலையத்திற்கு 3 மணித்தியாலங்களுக்கு முன்பு வருகை தறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.